| அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | 1 |
|
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | 2 |
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | 3 |
|
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | 4 |
|
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | 5 |
|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | 6 |
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | 7 |
|
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | 8 |
|
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | 9 |
|
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | 10 |
Sunday, 3 November 2013
திருக்குறள் | 1. அறத்துப்பால் | 1.1 கடவுள் வாழ்த்து | 1.1.1 கடவுள் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment