1.2.6 இனியவைகூறல்
|
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | 91 |
|
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | 92 |
|
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | 93 |
|
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | 94 |
|
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. | 95 |
|
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். | 96 |
|
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | 97 |
|
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். | 98 |
|
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? | 99 |
|
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. | 100 |
No comments:
Post a Comment