1.1.3. நீத்தார் பெருமை
|
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | 21 |
|
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | 22 |
|
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | 23 |
|
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | 24 |
|
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | 25 |
|
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | 26 |
|
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | 27 |
|
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | 28 |
|
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | 29 |
|
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | 30 |
No comments:
Post a Comment