1.2.3 புதல்வரைப் பெறுதல்
|
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. | 61 |
|
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | 62 |
|
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். | 63 |
|
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | 64 |
|
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | 65 |
|
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | 66 |
|
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | 67 |
|
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | 68 |
|
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | 69 |
|
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல். | 70 |
No comments:
Post a Comment