1.1.4. அறன்வலியுறுத்தல்
|
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | 31 |
|
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | 32 |
|
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | 33 |
|
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. | 34 |
|
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | 35 |
|
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | 36 |
|
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | 37 |
|
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | 38 |
|
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல. | 39 |
|
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | 40 |
No comments:
Post a Comment