1.2.4 அன்புடைமை
|
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | 71 |
|
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | 71 |
|
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | 73 |
|
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. | 74 |
|
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | 75 |
|
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | 76 |
|
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | 77 |
|
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | 78 |
|
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | 79 |
|
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | 80 |
No comments:
Post a Comment