1.2.9. அடக்கமுடைமை
|
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். | 121 |
|
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. | 122 |
|
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். | 123 |
|
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. | 124 |
|
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. | 125 |
|
ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து. | 126 |
|
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | 127 |
|
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். | 128 |
|
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. | 129 |
|
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. | 130 |
No comments:
Post a Comment