1.2.7 செய்ந்நன்றி அறிதல்
|
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. | 101 |
|
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. | 102 |
|
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. | 103 |
|
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். | 104 |
|
உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. | 105 |
|
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. | 106 |
|
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. | 107 |
|
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. | 108 |
|
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். | 109 |
|
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | 110 |
No comments:
Post a Comment